கழிவறையில் இறந்து கிடந்த ஆண் குழந்தை - போலீசார் விசாரணை

டெல்லியில் கழிவறையில் ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2022-12-10 14:49 IST

புதுடெல்லி,

டெல்லியின் ஷஹ்தராவில் ஜில்மில் தொழிற்சாலை பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறையில் இருந்து மூன்று வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது கழிப்பறையில் குழந்தையின் உடல் கிடப்பது குறித்து போலீசாருக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் சடலம் மற்றும் அதன் அருகில் இருந்து குழந்தையின் உள்ளாடை, பிஸ்கட் பாக்கெட், பணம் ஆகியவற்றை கண்டெடுத்தனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஷஹ்தரா துணை போலீஸ் கமிஷனர் கூறும்போது, "இறப்பிற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. குழந்தையின் உடலில் வெளிப்புற காயங்கள் அல்லது கழுத்தை நெரித்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்