நடிகை கரீனா கபூர் மூலம் வித்தியாசமான முறையில் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய டெல்லி போலீஸ்

சாலையில் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் குறித்து குறும்படங்களை டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ளது.

Update: 2022-07-16 17:39 GMT

புதுடெல்லி,

சமூக ஊடகங்கள் மூலம் நல்ல செய்திகளைப் பரப்பவும் பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புதுமையான வழிகளை அடிக்கடி கண்டுபிடிக்கும் டெல்லி போலீஸ், ஆக்கப்பூர்வமான திருப்பத்துடன் போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.

போக்குவரத்து சிக்னலில் சிவப்பு நிற விளக்குகள் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் சாலையில் வாகனங்களை இயக்கி, சாலையில் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் குறித்து குறும்படங்களை டெல்லி போக்குவரத்து போலீஸ் வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து போலீஸ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு நிற விளக்கு எரியும் போது, சிக்னலை கடந்து வேகமாக ஒரு கார் செல்கிறது. அந்த கார் ஓடிய பிறகு, சிவப்பு விளக்கில் இந்தி நடிகை கரீனா கபூர் உருவம் தோன்றுகிறது. அவர் நடித்த 'கபி குஷி கபி கம்' படத்தில் உள்ள வசனமான 'யார் பூவைத் திரும்பிப் பார்க்கவில்லை' என்ற அவரது சின்னச் சின்ன டயலாக்கை உச்சரிக்கிறார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் பூ.

பூ தன்னை பார்க்க வேண்டுமென்று கேட்கிறார். அதேபோல தான், போக்குவரத்து சிக்கன்லும் தன்னை கவனித்து விட்டு போக சொல்கிறது என்று டெல்லி போலீசார் டுவிட்டரில் பதிவிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இது மட்டுமன்றி, வேடிக்கையான மற்றும் வைரல் வழிகளைப் பயன்படுத்தி, சைபர் கிரைம்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்களுக்கு டெல்லி போலீசார் கற்பித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்