பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-17 05:44 GMT

டெல்லி,

பிரதமர் மோடி 1950 செப்டம்பர் 17ம் தேதி குஜராத் மாநிலம் வத்நகரில் பிறந்தார். 4 முறை குஜராத் முதல் மந்திரியாக செயல்பட்டுள்ள மோடி தற்போது தொடர்ந்து 3வது முறையாக நாட்டின் பிரதமராக செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, பிரதமர் மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மதிப்பிற்குரிய பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமாக வாழ எனது வாழ்த்துகள்' என பதிவிட்டுள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த 13ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்