பக்கத்து வீட்டுக்காரரின் நாய் தன்னை பார்த்து குரைத்ததால் ஆத்திரத்தில் மொத்த குடும்பத்தையும் கம்பியால் அடித்த நபர்!

அண்டை வீட்டுக்காரரின் நாய் தன்னை பார்த்து குரைத்ததால் ஆத்திரமடைந்த நபர், இரும்பு கம்பியால் அந்த நாயையும் அதன் உரிமையாளர்களையும் தாக்கினார்.

Update: 2022-07-04 04:13 GMT

புதுடெல்லி,

அண்டை வீட்டுக்காரரின் செல்லப்பிராணி நாய் ஒன்று தன்னை பார்த்து குரைத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், இரும்பு கம்பியால் அந்த நாயையும் அதன் உரிமையாளர்களையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தடியால் அவர்களை அடிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த நாயை வளர்க்கும் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர். டெல்லி பஸ்சிம் விஹார் கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதில் காயமடைந்தவர்கள், சிகிச்சை பெற்று வருகின்றனர். நாய்க்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது, உண்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்