சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் - பிரபல ரவுடிக்கு தொடர்பு - அதிர வைக்கும் கடிதம்

நடிகர் சல்மான்கானுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதத்தில் பிரபல ரவுடிக்கும் தொடர்பு இருப்பதை மும்பை போலீசார் உறுதிசெய்துள்ளனர்.

Update: 2022-06-10 13:58 GMT

கோப்புப்படம் 

மும்பை,

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் மும்பை பாந்திரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சல்மான்கானின் தந்தை சலீம்கானுக்கு நடைபயிற்சி மேற்கொண்டபோது, அங்கு வந்த மர்ம நபர், அவர் முன் கடிதம் ஒன்றை போட்டுச்சென்றார்.

அந்த கடிதத்தில் சல்மான்கான், சலீம்கானுக்கு சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் கதி விரைவில் ஏற்படும் என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து சல்மான் கான் வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மகாக்கல் என்பவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், திகார் சிறையில் உள்ள பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தான் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியதாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதற்காக பிஷ்னோயின் ரவுடி கும்பலை சேர்ந்த மூவர் ராஜஸ்தானில் இருந்து மராட்டியம் வந்ததாகவும், அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மிரட்டல் கடிதம் போட்டுச்சென்ற நபரை விரைவில் கைது செய்வோம் என போலீசார் தெரிவித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்