தசரா யானைகளுக்கு இன்று சிறப்பு பூஜை
தசரா யானைகளுக்கு இன்று மைசூரு அரண்மனையில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
மைசூரு:
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா, வருகிற 26-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் வரை நடக்கிறது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அபிமன்யு உள்ளிட்ட யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மைசூரு அரண்மனை வளாகத்தில் தசரா யானைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அதன்படி தசரா யானைகளை காலையில் குளிப்பாட்டி மாலை, குங்குமம் இட்டு முழுமுதற்கடவுளான விநாயகரை நினைவுகூர்ந்து யானைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. மேலும் யானைகளுக்கு கரும்பு, கொப்பரை தேங்காய், வெல்லம், வாழைப்பழங்கள் கொடுக்கப்படுகிறது.