உடைந்து கிடக்கும் நடைபாதை
பெங்களூரு ஜெயநகர் 15-வது கிராஸ் பகுதியில் ஒரு நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையின் சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து கிடக்கிறது. மேலும் அந்த நடைபாதையில் மண் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியவில்லை. மேலும் நடைபாதையையொட்டி சாலையும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்கிறது. சில நேரங்களில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து தங்கள் மீது மோதிவிடுமோ என்ற பயத்தில் பாதசாரிகள் நடந்து செல்கின்றனர். இதனால் நடைபாதை, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அம்சவேணி, ஜெயநகர், பெங்களூரு
தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
பெங்களூரு சாராயிபாளையா பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த சில தினங்களாக சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் தெருக்களில் கொசுக்கள் அதிகரித்து உள்ளது. கொசுக்கள் கடிப்பதால் குடியிருப்புவாசிகளுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனியப்பா, சாராயிபாளையா, பெங்களூரு