இந்தியாவில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,139 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update:2022-10-12 09:45 IST

புதுடெல்லி,

நமது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 424 பேருக்கு கொரோனா பாதித்தது. நேற்று இந்த எண்ணிக்கை 1,957 ஆக குறைந்தது இந்தநிலையில் சற்று அதிகரித்து 2,139 ஆனது. நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,18,533 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 27,374 லிருந்து 26,292 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 13 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,28,835 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்