சி.யூ.இ.டி. பொதுநுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; தேசிய தேர்வு முகமை
சி.யூ.இ.டி. பொதுநுழைவுத் தேர்வுக்கான தேதிகள் பற்றிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்களில் எம்.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான சி.யூ.இ.டி.(CUET) எனப்படும் மத்திய பல்கலைகழகங்களுக்கான பொதுநுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
அந்த வகையில் 2023 கல்வியாண்டிற்கான சி.யூ.இ.டி. முதுகலை பொதுநுழைவுத் தேர்வு, ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.