பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2024-04-28 16:28 GMT

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். இதுவரை 81,212 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 41,690 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்