இந்தியாவில் மேலும் 1,190 பேருக்கு தொற்று

இந்தியாவில் மேலும் 1,190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-02 05:26 GMT

புதுடெல்லி,

நேற்று முன்தினம் 1,326 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று இந்த எண்ணிக்கை 1,046 ஆக குறைந்த நிலையில் இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து 1,190 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 55 ஆயிரத்து 828 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,375பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 9 ஆயிரத்து 133 ஆக உயர்ந்தது. தற்போது 16,243 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாடு முழுவதும் கொரோனாவால் 1,375 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,30,452ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் அங்கு விடுபட்ட கொரோனா பலிகளில் கணக்கில் கொண்டு வந்தனர். நேற்று ஒரே நாளில் 6 பேர் மட்டுமே கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 2,19,66,16,127 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 1,23,859 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்