சாதிவாரி கணக்கெடுப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
சாதிவாரி கணக்கெடுப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடுமுழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு தாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், சாதிவாரி கணக்கெடுப்பை அவ்வப்போது நடத்த வேண்டும் என இந்திரா சகானி தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது மத்திய அரசின் அதிகார எல்லைக்குட்பட்டது, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மனுவை திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.