இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா... இன்று புதிதாக 1,300 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Update: 2023-03-23 07:37 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 646 ஆக இருந்த நிலையில் நேற்று 1,134 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 334 பேர், குஜராத்தில் 247 பேர், கேரளாவில் 172 பேர், கர்நாடகாவில் 105 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 99 ஆயிரத்து 418 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 718 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரத்து 997 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 7,605 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றைவிட 579 அதிகமாகும். கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,816 ஆக உயர்ந்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்