கர்நாடகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது

கர்நாடகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Update: 2022-06-29 20:44 GMT

பெங்களூரு

கர்நாடகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது.

1,249 பேருக்கு பாதிப்பு

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 25 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,249 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 1,109 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மைசூருவில் 31 பேர், தட்சிண கன்னடாவில் 29 பேர், தார்வாரில் 13 பேர், பல்லாரியில் 12 பேர், உத்தர கன்னடாவில் 8 பேர், உடுப்பி, துமகூரு, ஹாசனில் தலா 6 பேர்.

கோலார், சிவமொக்காவில் தலா 5 பேர், சிக்கமகளூரு, பெலகாவியில் தலா 4 பேர், பாகல்கோட்டை, பெங்களூரு புறநகர், ஹாவேரி, கலபுரகியில் தலா 2 பேர், பீதர், தாவணகெரே, ராய்ச்சூரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. இதுவரை 6 கோடியே 69 லட்சத்து 62 ஆயிரத்து 355 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 39 லட்சத்து 68 ஆயிரத்து 365 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதுவரை...

பெங்களூரு நகர், சித்ரதுர்காவில் தலா ஒருவர் கொரோனாவுக்கு புதிதாக இறந்தனர். இதுவரை 40 ஆயிரத்து 75 பேர் இறந்துள்ளனர். வைரசால் பாதிக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 1,154 பேர் குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை 39 லட்சத்து 22 ஆயிரத்து 541 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 5 ஆயிரத்து 707 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 4.84 சதவீதமாகவும், உயிரிழப்பு 0.16 சதவீதமாகவும் உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்