கேரளாவில் தொடர் கனமழை : 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது

Update: 2022-08-05 05:52 GMT

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இதன் காரணமாக திருச்சூர், இடுக்கி, பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இம்மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் அதிக மழை பெய்யும் என்று கூறப்பட்டிருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

கேரளாவில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்