சமூக வலைதளத்தில் வேறொருவருடன் தொடர்பு: இரும்பு கம்பியால் அடித்து காதலி கொலை- சக மாணவன் வெறிச்செயல்

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த மாணவியுடன் படித்த சக மாணவனான 17 வயது சிறுவன் பிடிபட்டான்.

Update: 2023-03-12 00:15 GMT

கோப்புப்படம் 

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் சிறுமி ஒருவரின் உடல் காயங்களுடன் கடந்த வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. உடலுக்கு சற்று தள்ளி ஒரு செல்போனும், இரும்புக்கம்பியும் கிடந்தன.

அந்த செல்போன் அச்சிறுமிக்கு சொந்தமானது என்பதும், அந்த இரும்புக்கம்பியால் அவர் அடித்துக்கொல்லப்பட்டிருப்பதும் தெரியவந்தன. அந்த சிறுமி, உர்ஜாநகரில் உள்ள பிரபல ஆங்கிலவழி பள்ளியில் பயின்றுவந்த மாணவி என்பதும் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த மாணவியுடன் படித்த சக மாணவனான 17 வயது சிறுவன் பிடிபட்டான். அவன், அந்த மாணவியை இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். அவன் தனது வாக்குமூலத்தில், நானும் அந்த மாணவியும் நெருங்கி பழகிவந்தோம். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் வேறொரு மாணவனுடன் தொடர்புகொண்டு உரையாடி வந்தார். அதனால் எனக்கு மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது.

கடந்த புதன்கிழமை மாலை தனது தோழி ஒருவரின் வீட்டில் ஹோலி பண்டிகையை கொண்டாட அவர் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த மாணவியை வழிமறித்த நான், இரும்புக்கம்பியால் அடித்துக்கொன்றேன் என்று கூறினான். அவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்