அரசின் மீது குறை சொல்வதை காங்கிரசார் நிறுத்த வேண்டும்- மந்திரி சுதாகர் பேட்டி

அரசின் மீது குறை சொல்வதை காங்கிரசார் நிறுத்த வேண்டும் என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-07 21:48 GMT

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தேர்வு முறைகேடு தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி கூட கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு முறைகேட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டு இருப்பதை எதிர்க்கட்சியான காங்கிரஸ் வரவேற்க வேண்டும். ஆனால் எந்த ஒருசாட்சிகள், ஆதாரங்கள் இல்லாமல் மந்திரி அஸ்வத் நாராயண் மீது குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல. மந்திரி அஸ்வத் நாராயண் மீது டி.கே.சிவக்குமார் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறுவது, ஒரு மாநில தலைவராக இருக்கும் அவர் சரியாக பேச வேண்டும்.


மற்ற எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி கைது செய்யப்படுவதி்ல்லை. கர்நாடகத்தில் தான் அது நடக்கிறது. அப்படி இருந்தும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் முதல்-மந்திரி, போலீஸ் மந்திரி பதவி விலக வலியுறுத்துவது, அவர்கள் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் கூறுவது சரியல்ல. அரசின் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் கூறுவதை காங்கிரசார் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்