கர்நாடகத்தில் 12-வது நாளாக ராகுல்காந்தி நடைபயணம்...!

கர்நாடகத்தில் 12-வது நாள் பாதயாத்திரை மேற்கொண்டார் ராகுல்காந்தி.

Update: 2022-10-13 03:51 GMT

பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். அந்த பாதயாத்திரை கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணித்து கேரளாவுக்கு சென்றது. அங்கு 19 நாட்கள் நடைபெற்ற பிறகு அந்த பாதயாத்திரை கடந்த மாதம் 30-ந் தேதி கர்நாடகத்திற்கு வந்தது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டைக்கு வந்த ராகுல் காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் 35-வது நாள் மற்றும் கர்நாடகத்தில் 11-வது நாள் பாதயாத்திரை சல்லகெரேயில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. அங்கிருந்து நடைபயணம் கிரியம்மனஹள்ளி வரை 14 கிலோ மீட்டர் நீடித்த நிலையில் 11 மணிக்கு ராகுல் காந்தி ஓய்வு எடுத்தார்.

பின்னர் மாலை 4 மணிக்கு பாதயாத்திரை அங்கிருந்து தொடங்கியது. ஹீரேஹள்ளி வரை 9.3 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நீடித்தது. அதன் பிறகு ராகுல் காந்தி மாலை நேர ஓய்வு எடுத்தார். அந்த ஓய்வுக்கு பிறகு பாதயாத்திரை 3.8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற நிலையில் விவேகானந்தா நேஷன் பள்ளி பகுதியில் நிறைவடைந்தது.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பொம்மகொண்டனஹள்ளியில் இருந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ' ஒற்றுமை பாதயாத்திரையை'யை மீண்டும் தொடங்கினார்.

கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய யாத்திரை இதுவரை 925 கி.மீ தூரம் பயணித்துள்ளது. இது மொத்தம் 12 மாநிலங்கள் வழியாகச் சென்று ஜம்மு காஷ்மீர் சென்றடையும்.

Tags:    

மேலும் செய்திகள்