அயோத்தி ராமரை அவமதித்தது காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பை மறுத்ததன் மூலம் ராமரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.
பிலிபத்,
உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- "அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படாமல் இருக்க காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், நாட்டு மக்கள் கொடுத்த ஒவ்வொரு பணத்தைக் கொண்டும் இவ்வளவு அழகான கோவில் உருவாக்கப்பட்டுள்ளது.
உங்கள் (காங்கிரஸ்) பாவங்களை மக்கள் மன்னித்து, உங்களை பிரான பிரதிஷ்டை விழாவுக்கு அழைத்தபோது, அந்த அழைப்பை நீங்கள் நிராகரித்தீர்கள். இதன் மூலம் ராமரை அவமதித்தீர்கள். இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள், ராமர் கோவில் கட்டுவதற்கு முன்பே வெறுப்புடன் இருந்தனர். தற்போதும்கூட அவர்கள் வெறுப்புடன்தான் இருக்கிறார்கள்" என்றார்.