டெல்லியில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக டெல்லியில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-10-10 15:32 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்று நடந்த மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் 200 கிலோவுக்கும் அதிகமான ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோகோயின் கைப்பற்றப்பட்டதாக சிறப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, ஜிபிஎஸ் மூலம் போதைப் பொருள் சப்ளை செய்பவரைக் கண்டுபிடித்து, மேற்கு டெல்லியின் ரமேஷ் நகரில் அவரைக் கண்டுபிடித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்த போதைப்பொருட்களை கைப்பற்றினர். முன்னதாக அதே சிண்டிகேட்டின் ஒரு பகுதியில்தான் டெல்லி காவல்துறை ரூ.5,600 மதிப்புள்ள கோகைனைக் கைப்பற்றி இருந்தது.

ஒரு வாரத்தில், சுமார் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, 762 கிலோ போதைப் பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது நாட்டிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் ஆகும்.

முன்னதாக கடந்த வாரம் தெற்கு டெல்லியில் நடந்த சோதனையில் 500 கிலோவுக்கும் அதிகமான கோகோயின் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து சர்வதேச கடத்தல் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்