ஜி20 மாநாட்டை சீன அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிக்க வாய்ப்பு என தகவல்
செப்., 9 -10 ல் இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதில் பிரதமர் லி கெகியாங் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.;
பிஜீங்,
நடப்பு ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த குழுவினரும் இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
டெல்லியில், வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனால், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய விமான படையை சேர்ந்த ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இவற்றுடன் சேர்த்து, ஆளில்லா விமானங்களை அழிக்கும் அமைப்புகளும் பல்வேறு இடங்களில் நிறுவப்படுகின்றன.
இந்தநிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்க பதில், வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ராவ் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய மற்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடியும் சீன அதிபரும் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவில் நிலவும் பதற்றங்களைக் குறைப்பது பற்றி இருவரும் ஆலோசித்ததாக கூறப்பட்டது.
ஜி 20 மாநாட்டில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று ரஷியா அதிபர் புதின் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். தனக்குப் பதிலாக வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ் கலந்துகொள்வார் என்று புதின் தெரிவித்தார். தற்போது சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது.