சாக்லேட்டால் பறிபோன குழந்தையின் உயிர்... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

கர்நாடகாவில் கார் மோதியதில் சுமார் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-12-27 20:13 GMT

பிதர்,

கர்நாடகா மாநிலம், பிதர் மாவட்டத்தின் ஹாரோகேரி பகுதியைச் சேர்ந்த தம்பதி சதீஷ் மற்றும் சங்கீதா. இவர்களது குழந்தை பசவ சேத்தன், சாக்லேட் வாங்குவதற்காக வீட்டின் அருகே இருந்த கடைக்குச் சென்றுள்ளான். அப்போது, அவ்வழியாக வந்த கார் குழந்தையின் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்