தலைமைச் செயலாளர்கள் மாநாடு- பிரதமர் மோடி பங்கேற்கிறார்
தலைமைச் செயலாளர்கள் பங்கேற்கும் 3 நாட்கள் மாநாடு டெல்லியில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது
புதுடெல்லி,
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்கும் 3 நாட்கள் மாநாடு டெல்லியில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் (ஜனவரி 6-7) பிரதமர் மோடி தலைமை தாங்கி உரையாற்ற உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
"தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில், 'வளர்ச்சியடைந்த இந்தியா: கடைசி மைல்கல்லை அடைதல்' 'ஜிஎஸ்டி மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் சவால்கள்' மற்றும் 'இந்தியாவின் பதில்' ஆகிய மூன்று சிறப்பு அமர்வுகள் நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுடன் இணைந்து விரைவான மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சியை அடைவது தொடர்பாக இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.