சத்தீஷ்கார்: நக்சல் தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.;
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தாகல்குடம் என்ற கிராமத்தில் இன்று நக்சல் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாகல்குடம் கிராமம் பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு பயங்கரவாத செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த சமயத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படை வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.