சென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவை ஒரு மாதம் ரத்து; தென்மேற்கு ரெயில்வே தகவல்

சென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவை இன்று (புதன்கிழமை) முதல் ஒரு மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2023-07-11 18:45 GMT

பெங்களூரு:

திருப்பதி ரெயில் நிலையத்தில் நடைமேடை பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

* எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-திருப்பதி தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16203) இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை ஒரு மாதம் ரத்து செய்யப்படுகிறது.

* திருப்பதி-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16204) இன்று முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை ஒரு மாதம் ரத்து செய்யப்படுகிறது.

* சாம்ராஜ்நகர்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (16219) நேற்று முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை பாகலா-திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* திருப்பதி-சாம்ராஜ்நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16220) இன்று முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை திருப்பதி-பாகலா இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, ஒரு மாதம் பாகலா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

* திருப்பதி-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி எக்ஸ்பிரஸ் ரெயில் (07657) இன்று முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை திருப்பதி-ரேணிகுண்டா இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு ரேணிகுண்டாவில் இருந்து புறப்படும்.

* எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (07658) நேற்று முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை ரேணிகுண்டா-திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்