ரூ.31,532-க்கு பிரியாணி வாங்கிய சென்னைக்காரர்..!
உலகிலேயே இந்தியர்கள் தான் அதிக அளவு பிரியாணியை ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை,
நாளை சர்வதேச பிரியாணி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், உலகிலேயே இந்தியர்கள் தான் அதிக அளவு பிரியாணியை ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் மட்டும் இந்தியர்கள் ஸ்விக்கியில் சுமார் 7 கோடியே 60 லட்சம் ஆர்டர்களைக் கொடுத்துள்ளதாகவும், நிமிடத்திற்கு 219 பிரியாணி ஆர்டர்கள் குவிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகளவு பிரியாணி ஆர்டர்கள் கொடுக்கப்பட்டதில் ஐதராபாத் முதலிடத்திலும், பெங்களூர் 2ம் இடத்திலும், சென்னை 3ம் இடத்திலும் உள்ளது.
அதிலும், சென்னையைச் சேர்ந்த ஒரு பிரியாணி காதலர் ஒரே ஆர்டரில் 31 ஆயிரத்து 532 ரூபாய்க்கு பிரியாணி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.