பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.

Update: 2024-08-18 01:55 GMT

புதுடெல்லி,

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நேற்று மாலை இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஆந்திர மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமரிடம் சந்திரபாபு நாயுடு பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் மாநில அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை விரைந்து ஒதுக்கிடுமாறு சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மேலும் சில மத்திய மந்திரிகளை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்