சி.பி.ஐ. இயக்குநராக கர்நாடக முன்னாள் டி.ஜி.பி. பதவியேற்பு
சி.பி.ஐ. அமைப்பின் புதிய இயக்குநராக கர்நாடகாவின் முன்னாள் டி.ஜி.பி. பிரவீன் சூட் இன்று பதவியேற்று கொண்டார்.;
புதுடெல்லி,
சி.பி.ஐ. அமைப்பின் இயக்குநராக பதவி வகித்து வந்த சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பதவி காலம் இன்றுடன் நிறைவடைகிறது. 2 ஆண்டு காலம் அந்த பதவியில் நீடித்த ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சி.பி.ஐ. அமைப்பின் புதிய இயக்குநராக கர்நாடகாவின் முன்னாள் டி.ஜி.பி. பிரவீன் சூட் இன்று பதவியேற்று கொண்டார்.
இவர் 1986-ம் ஆண்டு இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரியாக பணியில் சேர்ந்து உள்ளார். 37 ஆண்டுகள் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தபோது, பல்வேறு முக்கிய பதவிகளை அவர் வகித்து உள்ளார்.
மொரீசியஸ் அரசின் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார். அதிக பணமதிப்பு கொண்ட தனி நபர் தொடர்புடைய வழக்கு விசாரணைகளையும் மேற்பார்வை செய்து உள்ளார்.
இரு மாநிலங்களுக்கு இடையே மற்றும் சர்வதேச அளவிலான தொடர்புடைய வழக்குகள், இணையதளம், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்புடைய வழக்குகளிலும் விசாரணை மற்றும் கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.
சி.பி.ஐ. அமைப்பின் புதிய இயக்குநராக பதவியேற்று கொண்டதும், அதிகாரிகளுடன் அவர் உரையாடினார்.