கார்கள், பஸ் மோதல்; மெஸ்காம் என்ஜினீயர் சாவு
கார்கள், பஸ் மோதிய விபத்தில் மெஸ்காம் என்ஜினீயர் சாவு
மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டலாவில் மெஸ்காம் உதவி என்ஜினீயராக பணியாற்றி வந்தவர் பிரவீன் ஜோஷி(வயது 45). இவர், நேற்று காலை தனது காரில் வெளியே சென்றார். பண்ட்வால் அருகே மஹிஹல்லா என்ற இடத்தில் சென்றபோது இவரது கார், மற்றொரு கார் மோதியது. இதையடுத்து 2 கார்கள் மீதும் அந்த வழியாக வந்த பஸ் மோதி சங்கிலி தொடர் விபத்து ஏற்பட்டன. இதில் கார் பலத்த சேதமடைந்து உள்ளே இருந்த பிரவீன் ஜோஷி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பிரவீன் ஜோஷி உயிரிழந்தார்.
மேலும் மற்றொரு காரில் இருந்த 4 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பண்ட்வால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
\