டெல்லி: பெண் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் வன்முறை

டெல்லியில் பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற மெழுகுவர்த்தி பேரணி வன்முறையாக மாறியது.

Update: 2022-07-07 17:22 GMT

புதுடெல்லி,

டெல்லியின் காந்தி நகர் பகுதியில் கடந்த வாரம் பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து காந்தி நகர் பகுதியில் உள்ளவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

போலீசார் சாலைகளில் தடுப்புகள் அமைத்து பேரணி சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். பேரணி சென்றவர்கள் அந்த தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த நிலையில், பேரணி சென்றவர்களில் சிலர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால் அமைதியாக நடைபெற்ற பேரணி வன்முறையாக மாறியது.

இதனையடுத்து, போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த போராட்டகாரர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பேரணியை ஒருங்கிணைத்த நபரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்