குடோனில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள சாக்லேட் பார்கள் திருட்டு - போலீசார் விசாரணை

உத்தரப்பிரதேசத்தில் சாக்லேட் குடோனில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள சாக்லேட் பார்கள் திருடப்பட்டுள்ளன.

Update: 2022-08-17 12:01 GMT

கோப்புப்படம்

லக்னோ,

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ அருகே சின்ஹாட் பகுதியில் உள்ள சாக்லேட் குடோனில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள கேட்பரி சாக்லேட் பார்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்ஹாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ராஜேந்திர சிங் சித்து என்பவருக்கு சொந்தமான சாக்லேட் குடோனில் திங்கள் கிழமை நள்ளிரவுக்கு மேல் கதவுகள் உடைக்கப்பட்டு சாக்லேட்டுகள் திருடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ராஜேந்திர சிங் கூறுகையில், செவ்வாய்க்கிழமை குடோனுக்கு பக்கத்து வீட்டுக்காரர் செல்போனில் தொடர்பு கொண்டு குடோனின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்று பார்த்ததில் குடோனில் இருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள சாக்லேட்டுகள் திருடப்பட்டிருந்தன.

மேலும் குடோனில் இருந்த டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (டிவிஆர்), சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் திருடர்கள் எடுத்துச்சென்றுள்ளனர் என்று கூறினார். இதுகுறித்து சின்ஹாட் காவல் நிலைய போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 380-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மற்ற சிசிடிவி கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்