மருந்து தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 5 தொழிலாளர்கள் பலி

சற்றும் எதிர்பாராத விதமாக தொழிற்சாலையில் இருந்த பாய்லர் ஒன்று வெடித்து சிதறியது.;

Update:2024-04-04 09:20 IST

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை தொழிற்சாலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. மருந்து தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக தொழிற்சாலையில் இருந்த பாய்லர் ஒன்று வெடித்து சிதறியது. இதில் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 14 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்