டெல்லியில் பா.ஜ.க. தேர்தல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

டெல்லியில் பா.ஜ.க. தேர்தல் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2023-10-20 15:37 GMT

Image Courtesy : ANI

புதுடெல்லி,

இந்தியாவில் இந்த ஆண்டு சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்வதற்காக டெல்லியில் இன்று பா.ஜ.க. தேர்தல் பொதுக்குழு கூட்டம் கூடியுள்ளது.

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பா.ஜ.க. தேர்தல் பொதுக்குழு நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்