பெங்களூருவில், இன்று சைக்கிள் பேரணி

பெங்களூருவில், இன்று சைக்கிள் பேரணி நடக்கிறது;

Update:2022-06-02 21:58 IST

பெங்களூரு: விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி நாராயணகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-கர்நாடக அரசு சார்பில் உலக சைக்கிள் தின விழா நாளை (அதாவது இன்று) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சைக்கிள் பேரணியும் நடத்தப்படுகிறது. சைக்கிள் பயன்பாடு எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு சுற்றுச்சூழல் காக்கப்படும். அத்துடன் போக்குவரத்து நெரிசலும் குறையும். அதனால் பொதுமக்கள் அதிகளவில் சைக்கிளை பயன்படுத்த வேண்டும்.


சுதந்திர தின பவள விழா ஆண்டையொட்டி நாடு தழுவிய அளவில் 75 இடங்களில் சைக்கிள் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஹம்பி, கோல்கும்பாஸ், மைசூரு அரண்மனை, மல்பே, மடிக்கேரி ஆகிய இடங்களில் சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது.சைக்கிள் பேரணியில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுவோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு நாராயணகவுடா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்