கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேர் கைது

கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-05 16:52 GMT

பெங்களூரு: பெங்களூருவில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களின் கண்ணாடியை உடைத்து பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடியதாக 2 பேரை பண்டேபாளையா போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பதுங்கி இருந்த அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள், நடராஜ், கோகுல் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1.10 லட்சம் ரொக்கம், மடிக்கணினி, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பண்டேபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்