திருப்பதி படிக்கட்டு பாதையில் உலா வரும் கரடி - கண்காணிப்பு தீவிரம்

திருப்பதி படிக்கட்டு பாதையில் இரவு நேரத்தில் கரடி உலா வருவது தெரியவந்துள்ளது.

Update: 2023-08-01 16:18 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிக்கட்டு பாதை வழியாக மலையேறிச் சென்று ஏழுமலையான தரிசனம் செய்து வருகின்றனர். இந்த பாதையைச் சுற்றி அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளதால், சில சமயங்களில் வன விலங்குகள் உணவு தேடி கோவில் பகுதிக்கு வருகின்றன.

இந்த நிலையில் படிக்கட்டு பாதையில் இரவு நேரத்தில் கரடி உலா வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேவஸ்தான விஜிலன்ஸ் துறை அதிகாரிகள் கரடி நடமாடும் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Full View

  

Tags:    

மேலும் செய்திகள்