கர்நாடகத்தில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளுடன் ஊருக்குள் வந்த யானைக்குட்டி - வனத்துறையிடம் ஒப்படைப்பு
பசுக்கள் திரும்பி வந்த போது, அவற்றுடன் சேர்ந்து யானைக்குட்டி ஒன்று திரும்பி வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் ஜெகதீஸ் என்பவருக்கு சொந்தமான பசுக்கள் வழக்கம் போல மேய்ச்சலுக்கு சென்றன. அவ்வாறு மேய்ச்சலுக்கு சென்ற பசுக்கள் திரும்பி வந்த போது, அவற்றுடன் சேர்ந்து யானைக்குட்டி ஒன்று திரும்பி வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அந்த யானைக்குட்டி சிறிதும் பயமில்லாமல் அங்கிருந்தவர்களிடம் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தது. அதே சமயம் அது தனது கூட்டத்தை விட்டு பிரிந்த யானையாக இருக்கலாம் என்பதால், உடனடியாக இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானைக்குட்டியை மீட்டு அதன் தாயுடன் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.