24 விரல்களோடு பிறந்த அதிசய குழந்தை...கடவுளின் அவதாரம் என வழிபட்டு செல்லும் மக்கள்...!

தெலுங்கானாவில் கைகள் மற்றும் கால்களை சேர்த்து, 24 விரல்களோடு குழந்தை பிறந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-04-21 10:14 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில், நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ராவளி, இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அங்கு உள்ள கோரட்லா எனும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு அழகான ஆன் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தை ஒவ்வொரு கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்களை கொண்டு பிறந்துள்ளது. இந்த குழந்தை நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குழந்தையின் பெற்றோர்களான சாகர் மற்றும் ரவளி தாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் எங்கள் மகனை நாங்கள் கடவுள் கொடுத்த வரமாக கருதுவதாகவும் கூறி இருக்கின்றனர். எங்கள் மகனை இளவரசன் போல் வளர்ப்போம் என கூறி உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரவளி.

பெரும்பாலும் 10 கை மற்றும் 10 கால்களை கொண்டு பிறப்பது இயல்பு, அதிலும் சில குழந்தைகள் 6 விரல்களோடு பிறப்பது அரிது. இந்நிலையில் இந்த குழந்தை மொத்தமாக 24 விரல்களுடன் பிறந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.

மேலும் அந்த குழந்தை தெய்வத்தின் மறு உருவம் என்றும் கூறி வழிபட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் அக்குழந்தை கடவுளின் அவதாரம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிறக்கும் குழந்தைக்கு கூடுதல் விரல்கள் இருப்பது ஒரு அரிதான நிலை என்றாலும் இது போல பல நிகழ்வுகள் ஏற்கனவே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்