பெங்களூருவில் ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்-பரபரப்பு

ஓலா, ஊபர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்ததுடன், அபராதம் விதிக்கப்பட்டதால் ெபங்களூருவில் ஆட்டோ டிரைவர் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-11 17:25 GMT

பெங்களூரு:

கூடுதல் கட்டணம்

ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் வாடகை கார்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் வாடகை சேவையில் ஆட்டோக்களையும் இணைத்துள்ளது. இந்த ஆட்டோக்களில் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கட்டணத்தை விட கூடுதலாக பயணிகளிடம் வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது குறைந்தபட்சமாக ரூ.100 கட்டணமாக ஆட்டோக்கள் வசூலித்து வந்தன.

இதுகுறித்த பொதுமக்களின் புகார்களையடுத்து போக்குவரத்து ஆணையம் சார்பில் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. மேலும் ஓலா, ஊபர் நிறுவனங்கள் சார்பில் கார்களை மட்டுமே இயக்க வேண்டும் எனவும் வாடகை ஆட்டோ சேவையை நிறுத்த வேண்டும் எனவும் அதற்கு போக்குவரத்து ஆணையம் 3 நாட்கள் கால அவகாசம் விதித்து இருந்தது.

ஆட்டோக்கள் பறிமுதல்

இந்த நிலையில் நேற்று முதல் இந்த நிறுவனங்களின் வாடகை ஆட்டோ சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பெங்களூருவில் போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஜெயநகர் பகுதியில் இயக்கிய ஓலா, ஊபர் ஆட்டோகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பல இடங்களில் அந்த நிறுவனங்களில் இயங்கிய ஆட்டோக்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதமும் விதித்தனர். இதனால் ஆட்டோ டிரைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

போராட்டம்-பரபரப்பு

மேலும், அவர்கள் போக்குவரத்து அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஜெயநகர் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே தகவல் அறிந்து ஜெயநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் ஆட்டோ டிரைவர்களை சமாதானபடுத்த முயன்றனர். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து போலீசாரின் நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்