கேலோ இந்தியாவில் 11 சாதனைகளை முறியடித்த வீராங்கனைகள்; பிரதமர் மோடி பெருமிதம்

கேலோ இந்தியாவில் 11 சாதனைகளை வீராங்கனைகள் முறியடித்து உள்ளனர் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார்.;

Update:2022-06-26 12:31 IST



முனிச்,



பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அவர் 2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின்னரும் அது தொடருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. இது 90வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் இந்த முறை பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றன. நிறைய திறமையாளர்கள் இம்முறை வெளிப்பட்டனர். அவர்கள் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.

அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முன்னுக்கு வரபோராடியவர்கள். அதன்பின் வெற்றிக்கான இந்த நிலைக்கு அவர்கள் வந்தடைந்து உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் கூட பல சாதனைகளை நம்முடைய இளைஞர்கள் ஏற்படுத்தினர்.

மொத்தம் 12 சாதனைகள் இந்த முறை முறியடிக்கப்பட்டன. அவற்றில் 11 சாதனைகள் வீராங்கனைகள் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளன என அவர் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்