பாஜக அரசு இருக்கும்வரை 'ஒரு இன்ச்' நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது - அமித் ஷா

நாட்டில் பாஜக அரசு இருக்கும்வரை ‘ஒரு இன்ச்’ நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது என்று அமித்ஷா தெரிவித்தார்.

Update: 2022-12-13 07:56 GMT

புதுடெல்லி,

அருணாச்சலபிரதேச எல்லையில் தவாங் செக்டார் பகுதியில் கடந்த 9-ம் தேதி சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊருவ முயன்றன. அப்போது, இந்திய - சீன படைகள் மோதிக்கொண்டன. இந்த மோதலில் இரு தரப்பிலும் வீரர்கள் காயமடைந்தனர். இந்திய தரப்பில் 15 வீரர்கள் காயமடைந்தனர். சீன தரப்பில் அதிக அளவிலான வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதல் குறித்த தகவலை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது.

இந்நிலையில், சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமித்ஷா, நாட்டில் தற்போது பாஜக அரசு உள்ளது. எங்கள் அரசு இருக்கும்வரை நாட்டின் 'ஒரு இன்ச்' நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது. அருணாச்சலபிரதேசத்தில் கடந்த 8-9ம் தேதி இரவு நமது இந்திய வீரர்கள் காட்டிய வீரத்தை நான் வணங்குகிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்