பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பேட்டி

கர்நாடக மக்கள் காங்கிரசை மன்னிக்க மாட்டார்கள் என்று பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-26 18:45 GMT

பெங்களூரு:-

கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இட ஒதுக்கீடு விஷயத்தில் கர்நாடகத்தில் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பணியை பா.ஜனதா அரசு செய்துள்ளது. தலித் மக்களின் நீண்ட கால கோரிக்கையான உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை நிறைவேற்றியுள்ளோம். காங்கிரஸ் ஆட்சியில் அந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்காதது ஏன்?. அதனால் காங்கிரஸ் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.சித்தராமையா ஆட்சியில் எந்த திட்டங்களும் மேற்கொள்ளவில்லை. அப்போது ஊழல் அதிகமாக நடந்தது. அதன் காரணமாக கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. சித்தராமையா தனது சாதனைகளை மக்களிடம் எடுத்து வைக்கட்டும். நாங்களும் எங்களின் சாதனைகளை மக்களிடம் கூறுகிறோம்.

இவ்வாறு அருண்சிங் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்