பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல மீண்டும் அனுமதி
பால்டால் பாதை வழியாக அமர்நாத் புனித யாத்திரை செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத் அருகே ஜூலை 8-ம் தேதி ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பெருமழை பெய்தது. இந்த துயர சம்பவத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். இதனால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. இதையடுத்து, கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் மார்க்கத்திலிருந்து குகைக் கோயிலுக்குச் செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.