திருவனந்தபுரத்தில் இன்று நடக்கும்: ஓணம் அணிவகுப்பில் சந்திரயான்-3 விண்கலத்தின் மாதிரி

இந்த நிகழ்ச்சியில் சுமார் 3 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்பார்கள்.

Update: 2023-09-01 21:45 GMT

சென்னை, 

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரசுத்துறைகள் சார்பில் வாகன ஊர்திகள் அணிவகுப்பு நடப்பது வழக்கம். இதனை சாலைகளின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.அந்தவகையில் நடப்பாண்டு ஓணம் பண்டிகை அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணி அளவில் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதனையொட்டி மனவீயம் வீதியில் நடைபெறும் பவனி நிகழ்ச்சியை கவர்னர் ஆரிப் முகமது கான் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 3 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்பார்கள். இதில் பங்குபெற சந்திரயான்-3 திட்டத்துக்கான அலங்கார ஊர்தியும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தியில் சந்திரயான்-3 விண்கலம் மற்றும் ரோவர் வரை அனைத்துக்கூறுகளும் இதில் அடங்கி உள்ளது. கொல்லத்தைச்சேர்ந்த, டாக்டர் கோபன் என்பவர் பூமி மற்றும் நிலவு, நிலவின் மேற்பரப்பிற்கான பயணத்தின் போது விண்கலம் செல்லும் சுற்றுப்பாதைகளை தத்ரூபமாக அமைத்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்