டெல்லியில் அமித்ஷா - அஜித்பவார் திடீர் சந்திப்பு

அஜித்பவார் விரைவில் முதல்-மந்திரியாக பதவியேற்பார் அதற்கான அரசியல் மாற்றம் ஓரிரு நாட்களில் நிகழும் என்றார்.;

Update:2023-11-11 01:59 IST

புதுடெல்லி,

மராட்டிய துணை முதல்- மந்திரியும், தேசிய வாத காங்., கட்சி மூத்த தலைவருமான அஜித்பவார் நேற்று டெல்லியில் மத்தி உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜக கூட்டணியில், தேசியவாத காங்., கட்சி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அஜித் பவார் கடந்த ஜூலை மாதம் இணைந்து துணை முதல்- மந்திரி ஆனார்.

இந்நிலையில் நேற்று அஜித்பவார் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அம்மாநில மந்திரி தர்மாராவ் பாபா அட்டராம் நேற்று அளித்த பேட்டியில்,

அஜித்பவார் விரைவில் முதல்-மந்திரியாக பதவியேற்பார் அதற்கான அரசியல் மாற்றம் ஓரிரு நாட்களில் நிகழும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்