பூடானில் பாக்கு இறக்குமதி செய்வதை எதிர்த்து வருகிற 14-ந்தேதி பாக்கு விவசாய சங்கத்தினர் கண்டன ஊா்வலம்

பூடானில் பாக்கு இறக்குமதி செய்வதை எதிர்த்து வருகிற 14-ந்தேதி பாக்கு விவசாய சங்கத்தினர் கண்டன ஊா்வலம் நடத்தபோவதாக விவசாய சங்கத்தலைவர் கூறியுள்ளார்.

Update: 2022-10-08 19:00 GMT

சிவமொக்கா;


சிவமொக்காவில் நேற்றுமுன்தினம் விவசாய சங்க தலைவர் பசவராஜப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பூடான் நாட்டில் இருந்து பாக்கு இறக்குமதி செய்ய அனுமதி அளித்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சிவமொக்கா மாவட்ட பாக்கு விவசாயிகள், பாக்கு விற்பனை கூட்டுறவு சங்கத்தினர் சோ்ந்து வருகிற 14-ந்தேதி காலை 10 மணிக்கு மாபெரும் எதிர்ப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

அசோக் சதுக்கம் தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம். பூடானில் இருந்து 17 ஆயிரம் மெட்ரிக் டன் பச்சை பாக்கு கொட்டைகளை ஆண்டுதோறும் எம்.ஐ.பி. அனுமதி இல்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு தனது கட்டுப்பாட்டு திட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.

இதனால் கர்நாடகத்தில் உள்ள பாக்கு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசின் முடிவுக்கு பின்னணியில் வடநாட்டு குட்கா தயாரிக்கும் தொழில் அதிபர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்