ஆதித்யா - எல் 1 விண்கலம் பூமியின் ஈர்ப்பு மண்டலத்திலிருந்து வெளியேறியது- இஸ்ரோ

ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியின் ஈர்ப்பு மண்டலத்திலிருந்து வெளியேறி லெக்ராஞ்சி புள்ளியை நோக்கி சரியாக சென்று கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-09-30 13:55 GMT

பெங்களூரு,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலம், கடந்த 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும். விண்கலம் பூமியைச் சுற்றி வரும் போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்பட்டது.

இந்நிலையில்  விண்கலம் தற்போது பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து விலகி வெற்றிகரமாக 'லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.  விண்கலம் பூமியிலிருந்து 9.2 லட்சம் கிலோமீட்டர் தொலைவில்  பயணித்து கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்