ராஜஸ்தானில் பனிமூட்டம் காரணமாக விபத்து; 3 பேர் பலி

ராஜஸ்தானில் பனிமூட்டம் காரணமாக நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.

Update: 2023-01-13 23:20 GMT

சீகர்,

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அடர்ந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்தநிலையில் ஒரு குடும்பத்தினர் நாகூரில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.

நெச்வா என்ற பகுதிக்கு கார் வந்தபோது அடர்ந்த பனிமூட்டம் காரணமாக திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவன் உள்பட 3 பேர் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்