ஆதிக் அகமது கொலை சம்பவம் - பயிற்சி கொடுத்த 3 பேர் கைது
உத்தரப்பிரதேசத்தில், ஆதிக் அகமது கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளிகளுக்கு பயிற்சி கொடுத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ,
உத்தரப்பிரதேசத்தில், 5 முறை எம்.எல்.ஏ.வாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அலகாபாத்தின் பெரிய கேங்க்ஸ்டரில் ஒருவரான அதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல்துறையினர் அருகில் நிருபர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்த நிலையில் நடந்த இந்த சம்பவத்தில், ஆதிக் அகமது மீதும், அஷ்ரப் மீதும் 36 தோட்டாக்கள் பொழிந்தன. இவ்வழக்கில் கொலையாளிகள் மூவரும் காவல்துறையிடம் சரணடைந்தனர்.
இந்நிலையில், பத்திரிகையாளர் போல் வேடமணிந்து வந்த கொலையாளிகளுக்கு பயிற்சி அளித்த 3 பேரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆதிக் அகமது கொலை செய்யப்படும் காட்சியை யாரும் சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.