தலையில் கல்லை போட்டு பெண் படுகொலை
பெங்களூருவில் தலையில் கல்லை போட்டு பெண் படுகொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு:
பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் உள்ள ஏரியின் அருகே நேற்று காலை ஒரு பெண் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொம்மனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த பெண்ணை மர்மநபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
ஆனால் அந்த பெண் யார்? எந்தப்பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பொம்மனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.